வீட்டில் திடீரென தீ விபத்து புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல்!

X
தூத்துக்குடியில் மீனாட்சிபுரத்தில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் சாமி படம் முன்பு விளக்கில் ஏற்றிய தீபத்திலிருந்து ஏற்பட்ட தீ விபத்து மூலம் வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து சேதம் புகை மூட்டம் காரணமாக அந்த பகுதி முழுவதும் சிறிது நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டது தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்ப்பு தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் மூணாவது தெரு கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கிரக துரை அவரது மனைவி ஜமுனா இந்நிலையில் கிரகதுரை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட ஜமுனா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் இன்று அவரது வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர் இதைத்தொடர்ந்து மாலை சுமார் 6 மணி அளவில் தனது வீட்டில் பீரோ அருகே அமைந்துள்ள சாமி படங்கள் வைத்து பூஜை செய்யும் பகுதியில் விளக்கில் தீபம் ஏற்றிவிட்டு வீட்டை பூட்டிவிட்டு ஜமுனா உறவினர்களுடன் கோயிலுக்கு சென்றுள்ளார் அப்போது திடீரென ஜமுனாவின் வீட்டிலிருந்து கரும்புகை வெளியே வர துவங்கியுள்ளது இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் ஜமுனாவிற்கு தகவல் தெறிவித்தனர் இதை தொடர்ந்து அங்கே வந்த தீயணைப்பு துறையினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்ததில் விளக்கில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து தீ பரவியதில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது இந்த தீவிபத்தில் பீரோவில் இருந்த பொருட்கள் மற்றும் அந்த அறையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது மேலும் இந்த தீ விபத்து காரணமாக கரும் புகை உருவாகி அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது இதன் காரணமாக சிறிது நேரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டது இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் உடனடியாக தீயை அணைத்தனர் இதன் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது இந்தச் தீ விபத்து சம்பவம் குறித்து மத்தியபாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

