துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட இளைஞர் அவல நிலை!

X
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்த இளைஞருக்கு சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் வேலை அரசு வழங்கிய நிலையில் காயம் காரணமாக தனக்கு வழங்கப்பட்ட வேலையை தனது மனைவிக்கு மாற்றி தரக்கோரி கடந்த ஏழு ஆண்டுகளாக போராடிவரும் இளைஞர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்த இளைஞருக்கு சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் வேலை அரசு வழங்கிய நிலையில் காயம் காரணமாக தனக்கு வழங்கப்பட்ட வேலையை தனது மனைவிக்கு மாற்றி தரக்கோரி கடந்த ஏழு ஆண்டுகளாக போராடிவரும் இளைஞர் கண்டுகொள்ளாத அரசு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் சாலையை எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் இதில் தூத்துக்குடி காமராஜ் நகரை சேர்ந்த சேர்ம துரை என்ற வாலிபர் தனது வலது காலில் குண்டடிப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 3 மாதங்களாக சிகிச்சை பெற்று இது தொடர்ந்து நாகர்கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார் குண்டு காயம் அடைந்த அவருக்கு தமிழக அரசு சார்பில் சத்துணவு துறையில் சத்துணவு உதவியாளர் பணி பொட்டல்காடு கிராமத்தில் வழங்கப்பட்டது சேர்ம துரைக்கு வலது காலில் குண்டு காயம் ஏற்பட்டதால் அவரால் சத்துணவு உதவியாளர் பணியை செய்ய முடியவில்லை ஆகையினால் கடந்த சில ஆண்டுகளாக அந்த பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார் தனது வறுமையின் காரணமாக தன்னால் வேலை செய்ய முடியவில்லை என்பதால் தனது வேலையை பட்டதாரி பெண்ணான தனது மனைவிக்கு வழங்க வேண்டும் என பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வருக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆகையினால் தான் குடும்பம் வறுமையில் உள்ளதால் தனக்கு வழங்கிய அரசு பணியை மாற்றி தனது மனைவிக்கு படித்த பட்டதாரி மனைவிக்கு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திய ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு தகுதியான பணி வழங்க வேண்டும் என பரிந்துறை செய்துள்ளார் மேலும் தமிழக முதல்வர் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு தகுதியான வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த வேதனையுடன் வறுமையுடன் வாழ்ந்து வரும் சேர்மத்துரை குடும்பத்திற்கு தற்போது அரசும் தன்னை 7 ஆண்டுகளாக மன வேதனைக்கு உள்ளாக்கி வரும் நிலையில் வாழவே வழியில்லாமல் வறுமையில் வாழ்ந்து வரும் சேர்ம துரை குடும்பத்திற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து அவரது வாழ்க்கையில் ஒளியேற்றுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது
Next Story

