பூக்கடைக்காரர் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை

பூக்கடைக்காரர் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை
X
திண்டுக்கல்லில் பூக்கடைக்காரர் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை
திண்டுக்கல், YMR-பட்டியை சேர்ந்த கதிரேசன் மகன் வினோத்குமார்(35) இவர் பூக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவர் கடன் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் கடந்த 16ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று வினோத்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story