ஊத்தங்கரை: டூவீலரில் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு.

ஊத்தங்கரை: டூவீலரில் மீது  டிப்பர் லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு.
X
ஊத்தங்கரை:டூவீலரில் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல்ராவந்தவாடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (27) இவர். நேற்று முன்தினம் ஊத்தங்கரையில் இருந்து தனது டூவீலரில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது பாம்பாறு அணை பேருந்து நிறுத்தம் அருகே சென்றார். முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்த முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக டூவீலர் மீது டிப்பர் லாரி மோதியதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியை ஓட்டி வந்த வெங்கடேசன் என்பவர் தலைமறைவானார். தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் இறந்த முருகேசனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story