மலர் ஏல மையத்தை சட்டமன்றப் பேரவை, மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு.

X
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மதிப்பீட்டுக் குழு (2024-2026)ஓசூர், மோரனப்பள்ளி கிராமத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக செயல்பட்டு வரும் சர்வதேச மலர் ஏல மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மதிப்பீட்டுக் குழுத்தலைவர் / வேடசந்தூர் எம்.எல்.ஏ. எஸ்.காந்திராஜன் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு முதன்மைச் செயலாளர் கி.சீனிவாசன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், ஆகியோர் முன்னிலையில், மதிப்பீட்டுக் குழு எம்.எல்.ஏ.க்கள் தா.உதயசூரியன் (சங்கராபுரம்) சேவூர் எஸ்.இராமச்சந்திரன் (ஆரணி) எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூர்), எஸ்.பி.வெங்கடேசன் (தருமபுரி) ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். உடன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்
Next Story

