நாகரசம்பட்டியில் ஜல்லிக்கற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்

X
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அருகே நாகரசம்பட்டி பகுதியில் சிலர் அனு மதியின்றி ஜல்லிக்கற்கள் கடத்துவதாக மருதேரி வி.ஏ.ஒ. தாமோதரனுக்கு தகவல் வந்தது. இதை அடுத்து அவரது தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் காவாப்பட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற ஒரு டிராக்டரை சோதனை செய்ததில் ஒரு யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்த முயன்றது தெரியவந்தது. இது குறித்து தாமோதரன் கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

