மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை
X
மதுரை அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை அருகே அவனியாபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த கதிரவன் (36) என்பவருக்கும் அவரது மனைவி செங்கதிர் செல்விக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மனமுடைந்த கதிரவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story