திறப்பு விழா காணாத ரேஷன் கடை

திறப்பு விழா காணாத ரேஷன் கடை
X
திற்பரப்பு
குமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சி 10 வது வார்டு கோட்டூர் கோணம் காலனி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022-23 ம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டில் ரூ 10 லட்சம் செலவில் நியாயவிலைக்கடை கட்டப்பட்டது. இக்கட்டிடம் கட்டி முடித்து ஒருவருட காலத்திற்கு மேலாகிறது. இருப்பினும் இது திறக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் வாடகை கட்டிடத்திலேயே தொடர்ந்து ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களின் வசதி கருதி அரசு நிதியில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா காணாததால் தொடர்ந்து மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. மேலும் பராமரிப்பு இல்லாத நிலையில் இக்கட்டிடத்தின் சுற்றுப்பகுதிகளில் செடிகள் வளர்ந்து புதராக காட்சி அளிக்கின்றன. இவை விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக மாறி வருகிறது. மக்களின் அடிப்படை வசதிக்காக நிறைவேற்றப்பட்ட இத்திட்டம் செயல்பாட்டிற்கு வராமலே கட்டிடம் பழுதடையும் பரிதாப நிலை இங்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் விரயம் ஆகும் நிலை ஏற்பட்டு உள்ளது.  திறப்பு விழாவை மேலும் தள்ளிப்போடாமல் மக்கள் பயன்பாட்டிற்கு இக்கட்டிடத்தை உடனே திறந்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
Next Story