தனியார் நிறுவன ஊழியருக்கு இ.எஸ்.ஐ. உதவித்தொகை

X
சேலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பாபு கோவிந்தன் என்பவர் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்துக்கு மாதம் ரூ.15 ஆயிரத்து 720 சார்ந்தோர் உதவித்தொகையாக வழங்குவதற்கான ஆணை சேலம் இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலகத்தின் இணை இயக்குனர் (பொறுப்பு) சிவராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது. இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இ.எஸ்.ஐ. கிளை மேலாளர் ஜெனோவா, இறந்ததவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் தனியார் நிறுவன அதிகாரி சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

