அரசுப் பள்ளியில் உலக பல்லுயிர் பெருக்க தினக் கொண்டாட்டம்

அரசுப் பள்ளியில் உலக பல்லுயிர் பெருக்க தினக் கொண்டாட்டம்
X
அரசுப் பள்ளியில் உலக பல்லுயிர் பெருக்க தினக் கொண்டாடப்பட்டது.
அரியலூர், மே 23 - அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், உலக பல்லுயிர் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து பேசுகையில், தாவரங்கள் விலங்குகள் நுண்ணுயிர்கள் ஆகியவை பல்கி பெருகுவதை பல்லுயிர் பெருக்கம் என்கிறோம். உலகில் அழிந்து வரும் உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். காடுகள் அழிப்பு, நெகிழி பயன்பாடு, தொழிற்சாலை கழிவுகள், பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் பூமியின் வெப்பநிலை ஆண்டுதோறும் அதிகரிக்கின்றது. இதனால் பனிப்பாறைகள் உருகுதல் போன்ற இடர்பாடுகள் ஏற்படுகின்றன. அழியும் நிலையில் உள்ள உயிரினங்களை அழிவிலிருந்து காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அதிகப்படியான மரங்களை வளர்க்க வேண்டும். நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மனிதர்களுக்கு தேவைப்படுகின்ற உணவு, உடை, மருத்துவ தேவைகள் ஆகியவற்றை பூர்த்தி செய்ய பல்லுயிர் பெருக்கம் பயன்படுகிறது. மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலா மேம்பட உதவுகிறது. அனைத்து உயிரினங்களையும் நாம் ஒன்றிணைந்து பாதுகாப்போம் என்றார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் பாலமுருகன், சிறுவளூர் கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
Next Story