தோவாளை : ரயிலில் தவறி விழுந்து ஒருவர் பலி 

தோவாளை : ரயிலில் தவறி விழுந்து ஒருவர் பலி 
X
நாகர்கோவில்
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது.  இந்த ரயில் நேற்று காலை  ஏழு மணி அளவில் தோவாளை அருகே வந்து கொண்டிருந்தது.  அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருந்து ஒருவர் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.  இது குறித்து ரயிலில் பயணம் செய்த வர்கள் நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.  ரயில்வே  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவரின் உடலை மீட்டு,  ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இறந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.  முதல் கட்ட விசாரணையில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் நெல்லையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வேலைக்கு அல்லது மருத்துவமனைக்கு சென்றவராக இருக்கலாம் என போலீசார் கருதினர்.  இறந்தவர் யார்?  எந்த ஊரை சேர்ந்தவர்?  என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story