கோவை: தாய்-சேய் சிலை திறப்பு !

அன்னையர் தினத்தை முன்னிட்டு, கோவை லாலி சாலை சந்திப்பில் அமைந்துள்ள ரவுண்டானாவில் தாய்மை மற்றும் குழந்தையின் அழகிய சிலை திறக்கப்பட்டது.
அன்னையர் தினத்தை முன்னிட்டு, கோவை லாலி சாலை சந்திப்பில் அமைந்துள்ள ரவுண்டானாவில் தாய்மை மற்றும் குழந்தையின் அழகிய சிலை நேற்று திறக்கப்பட்டது. தாய்மையின் பிணைப்பைச் சிறப்பிக்கும் வகையில் ராவ் மருத்துவமனை இச்சிலையை நிறுவியுள்ளது. சிலை திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மற்றும் ராவ் மருத்துவமனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிலையை நிறுவுவதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் வழங்கிய மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு ராவ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராவ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த சிலை கோயம்புத்தூர் நகர மக்களுக்கு தாய்மையின் முக்கியத்துவத்தையும், தாய்-சேய் உறவின் புனிதத்தையும் நினைவூட்டும் என்று கூறியுள்ளனர்.
Next Story