நெமிலியில் ஒன்றியக்குழு கூட்டம்!

நெமிலியில் ஒன்றியக்குழு கூட்டம்!
X
நெமிலியில் ஒன்றியக்குழு கூட்டம்!
நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயஸ்ரீ, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.5.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள், வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக பொதுவிவாதம் நடைபெற்றது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story