மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டை முகாம்

X
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் பரணீதரன், காது, மூக்கு, தொண்டை டாக்டர் கணேஷ்ராஜா, மனநல டாக்டர் ஜெயந்தி, கண் டாக்டர் சுரேஷ்குமார், முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் 45 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
Next Story

