கோவை: இரண்டாம் நிலை காவலர்களுக்கு கமாண்டோ பயிற்சி!

X
கோவை காவல் பயிற்சிப் பள்ளியில் 183 இரண்டாம் நிலை காவலர்களுக்கான 7 மாத அடிப்படை பயிற்சி நிறைவடையும் நிலையில், அவர்களுக்கு நவீன கமாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் குணசேகரன் மற்றும் துணை முதல்வர் பழனிகுமார் முன்னிலையில், சென்னை கமாண்டோ தலைமை அலுவலகத்திலிருந்து வந்த நான்கு கமாண்டோ படை வீரர்கள், உதவி ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் இந்தப் பயிற்சியை வழங்கி வருகின்றனர். நேற்று தொடங்கிய இந்தப் பயிற்சி, இன்று மற்றும் நாளையும் நடைபெற உள்ளது. பயிற்சியின் ஒரு பகுதியாக, காவலர்களுக்கு நவீன முறையில் துப்பாக்கி கையாளுவது எப்படி மற்றும் பலவித கமாண்டோ நுட்பங்கள் கற்றுக்கொடுக்கப்படவுள்ளன. முன்னதாக, இந்தப் பயிற்சி காவலர்களுக்கு ஆயுதப் பயிற்சி, தற்காப்பு நுட்பங்கள் மற்றும் உளவுத் தகவல் சேகரிப்பு போன்ற உயர் ரீதியிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரத்தியேக கமாண்டோ பயிற்சி, காவலர்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி, சவாலான சூழ்நிலைகளை திறம்பட கையாள அவர்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story

