திருப்பரங்குன்றத்தில் முகூர்த்தக்கால் நடும் விழா
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் இந்த நிலையில் அதன் தொடக்கமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து வரும் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை 5 :25 மணி முதல் 6:10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக யாகசாலை மண்டபம் அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதற்கு இன்று (மே.23) கோவில் உற்சவர் மண்டபத்தில் முகூர்த்த காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து முகூர்த்தகாலை சுமந்து கோவில் வளாகத்தை சுற்றி வந்து கோவில் கந்த சஷ்டி மண்டபம் அருகே யாகசாலை மண்டபம் அமையும் இடத்தில் நவதானியம் பால் ஊற்றப்பட்டு மேளதாளங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.அதனை தொடர்ந்து முகூர்த்த காலுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. இதில் கோவில் அறங்காவலர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




