இஸ்ரேலுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் அருகே இன்று (மே.23) மதியம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் மனித இன அமைப்பு பயங்கரவாதத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சீனி அகமது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
Next Story



