பாஜக கிழக்கு மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா

X
திண்டுக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில பாஜக தலைமை அறிவித்தது. இந்த நிலையில் புதிய மாவட்ட தலைவர் பொறுப்பேற்ற முத்துராமலிங்கம் நத்தம் சாலையில் உள்ள குள்ளனம் பட்டியில் அலுவலகம் திறக்க முடிவு செய்து அதற்காக பணிகள் நிறைவுற்று, இன்று அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கணபதியாகம், கும்ப பூஜை, கோமாதா பூஜை, செய்து அலுவலகத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு குழு செயலாளர் கேசவ விநாயகம் பூஜையில் பங்கேற்று கொடி ஏற்றி வைத்து அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

