வீட்டில் குட்கா விற்ற பெண் கைது

வீட்டில் குட்கா  விற்ற பெண் கைது
X
நித்திரவிளை
குமரி மாவட்டம் நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையான போலீசார் நேற்று இரவு 7 மணியளவில் மீனவ கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூத்துறை மீனவ கிராமத்தில் ஒரு வீட்டின் முன்னால் ஆட்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர் வீட்டின் உள்ளே சென்று சோதனை செய்தார். அப்போது கட்டிலின் அடியில் குட்கா புகையிலை பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. போலீசார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா புகையிலை கைப்பற்றி புகையிலை விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் அளித்த புகாரின் பேரில் 40 பாக்கெட் குட்கா புகையிலை பறிமுதல் செய்து, டில்லி மேரி ( 60) என்ற பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
Next Story