கோவை: குப்பைக் கிடங்கு மூடல் - குப்பை கொட்டத் தடை!

X
மருதமலை அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த காட்டு யானையின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குப்பைக் கிடங்கு முழுமையாக மூடப்பட்டதுடன், வன எல்லையில் குப்பைகள் கொட்டவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, மருதமலை அடிவாரப் பகுதியில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஒரு காட்டு யானை உயிரிழந்தது. கால்நடை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தபோது, யானையின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததும், அவை செரிமான மண்டலத்தை அடைத்து உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் வன விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டன. சோமையம்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான, வனப்பகுதிக்கு அருகாமையில் அமைந்திருந்த குப்பைக் கிடங்கு நிரந்தரமாக மூடப்பட்டது. இனிவரும் காலங்களில் வனப்பகுதியை ஒட்டிய எந்தப் பகுதியிலும் குப்பைகள் கொட்ட அனுமதிக்கப்படாது என அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
Next Story

