கோவை: மருதமலை முருகன் கோவிலில் நடிகர் சூரி சாமி தரிசனம்!
அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மாமன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூரி நேற்று மாலை மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவைyil பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சூரி, நிகழ்வை முடித்தவுடன் நேராக மருதமலை முருகன் கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டார். சாமி தரிசனத்தைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பக்தர்கள் மற்றும் ரசிகர்களிடம் தனது மாமன் திரைப்படத்தைப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். நடிகர் சூரியின் இந்த திடீர் வருகை பக்தர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
Next Story




