அண்ணா தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு...*

X
விருதுநகரில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டு திமுக ஆட்சிக்கு வந்து கடந்த நான்கு வருடமாகியும், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்ன ஆச்சு, மேலும் இரண்டு வருடம் முடிந்தும் போக்குவரத்து தொழிலாளர்களின் பேச்சு வார்த்தை என்னாச்சு, போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு டி.ஏ நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கிட வேண்டும்,கடந்த 2023 முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் , பொன்விழா ஆண்டில் சின்ன பரிசு பொருள்களை கொடுத்து தொழிலாளர்களை ஏமாற்ற கூடாது, மேலும் பொன்விழா ஆண்டை முன்னிட்டு போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் மின்சாரத் துறையில் வழங்கியது போல் 3% சிறப்பு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் காலம் தாழ்த்தக்கூடாது, இனியும் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் தமிழக க அரசு காலம் தாழ்த்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஅண்ணா தொழிற்சங்கம் சார்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கட்டண முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story

