பட்டாசு தொழில் வலிமை பெற பாரத பிரதமரிடம் எடுத்துரைத்து வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார

பட்டாசு தொழில் வலிமை பெற பாரத பிரதமரிடம் எடுத்துரைத்து வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார
X
பட்டாசு தொழில் வலிமை பெற பாரத பிரதமரிடம் எடுத்துரைத்து வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.*
சிவகாசி பட்டாசு தொழில் வலிமை பெற பாரத பிரதமரிடம் எடுத்துரைத்து வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொண்டார். ஆலோசனை முடிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்லும் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நைனார் நாகேந்திரன், மாநில வருமான வரி துறை விசாரணை நடத்திய பின்பு தான் அமலாக்கத்துறை டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் விசாரணை நடத்தினர். நீதிமன்ற தீர்ப்பு, இடைக்கால தடைக்கு விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வரை சென்று ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என கேட்டு வந்தார்கள். நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு அதைப்பற்றி பேசலாம். பல்லடத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு தொடர்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற போது பாஜக தலையிட்ட பின் போராட்டம் முடிவுக்கு வந்தது. விசைத்தறியை பொறுத்தவரை அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு உள்ளது. அரசாங்கம், சம்பந்தப்பட்ட கைத்தறித்துறை அமைச்சர் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிவகாசியில் உள்ள சிறு பட்டாசு ஆலைகளில் மட்டும்தான் அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் மூட வைப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு, இது தொடர்பாக தம்மை சிவகாசி பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் நேரில் வந்து சந்தித்ததாகவும், சிவகாசியில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பட்டாசு தொழில் வலிமை பெற மத்திய அமைச்சருக்கும் பாரத பிரதமரிடமும் எடுத்துரைத்து அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் பேட்டி : நயினார் நாகேந்திரன் - மாநிலத் தலைவர் (பாஜக)
Next Story