ஜமாபந்தியில் வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ் வருவாய்துறை கணக்குகளை சரிபார்த்ததோடு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார்

X
அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ் வருவாய்துறை கணக்குகளை சரிபார்த்ததோடு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434 பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்குகளை தணிக்கை செய்யும் பணி(ஜமாபந்தி) மேற்கொள்ளப்பட்டது வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் வருவாய்துறை கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. இதில் கோட்டாட்சியர் கனகராஜ் கணக்குகளை சரிபார்த்து கோப்பில் கையெழுத்திட்டார். மேலும் அதேபோல பொதுமக்கள் ஏராளமானோர் இந்த ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் கனகராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் வட்டாட்சியர் செந்தில் வேல், தலைமை நில அளவையாளர் முத்து மாடத்தி உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

