டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்

மீஞ்சூர். பாரத் பெட்ரோலியம் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம். தாங்களுக்கு இதுவரை அளித்து வந்த லாரி வாடகையை குறைத்ததால் அதை மீண்டும் எப்பொழுதும் அளிக்கும் வாடகை அடிப்படையில் அளிக்க வேண்டும் என்று போராட்டம். இதன் காரணமாக விமானத்திற்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் தடைபடுமென்று பெட்ரோலிய லாரி உரிமையாள
மீஞ்சூர். பாரத் பெட்ரோலியம் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம். தாங்களுக்கு இதுவரை அளித்து வந்த லாரி வாடகையை குறைத்ததால் அதை மீண்டும் எப்பொழுதும் அளிக்கும் வாடகை அடிப்படையில் அளிக்க வேண்டும் என்று போராட்டம். இதன் காரணமாக விமானத்திற்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் தடைபடுமென்று பெட்ரோலிய லாரி உரிமையாளர்கள் தகவல். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் இயங்கி வருகிறது பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு கப்பலின் மூலமாக பெட்ரோல் டீசல் இறக்குமதி செய்யப்பட்டு அது அருகில் உள்ள பகுதிகளுக்கும் விமான நிலையங்களுக்கும் டேங்கர் லாரி மூலமாக எடுத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் டேங்கர் லாரியை வாடகை அடிப்படையில் இயக்கும் உரிமையாளர்கள் தங்களுக்கு நிறுவனம் இது நாள் வரை அளித்து வந்த வாடகையை குறைப்பதாகவும். தற்பொழுது அளிக்கப்படும் டெண்டர் மூலமாக மிகவும் குறைந்த அளவில் வாடகை நிர்ணயிக்கப்படுவதால். தாங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறோம் என்று கூறி இரண்டு நாட்களாக நிறுவனத்திடம் இதுகுறித்து கூறி இருந்த நிலையில் அவர்கள் அதற்கு சரியான பதில் அளிக்காததால் இன்று அது குறித்து பேசுவதற்காக வந்த நிலையில் சரியான முறையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் அலைகழித்ததால் நாளை முதல் போராட்டம் தீவிரம் அடையும் என்றும் கூறுகின்றனர். இதன் காரணமாக விமானத்தில் பயன்படுத்தப்படும் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
Next Story