புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலக்டரிடம் மனு

திருத்தணி அருகே புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்களாக போராட்டம் நடத்திய நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கடை திறப்பு : பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து  கலெக்டரிடம் மனு :
திருத்தணி அருகே புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்களாக போராட்டம் நடத்திய நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கடை திறப்பு : பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து  கலெக்டரிடம் மனு : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பட்டபிராமபுரம் ஊராட்சியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.திருத்தணி அருகில் பொன் பாடி என்ற பகுதியிலிருந்த கடை இடமாற்றம் செய்யப்பட்டு இந்த பகுதியில் புதிய கடையாக திறப்பதற்கு  இந்த  ஊராட்சியை சேர்ந்த பாமகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பகுதி பாமகவைச் சேர்ந்த பெண்கள் கடையை முற்றுகையிட்டு கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் செய்தனர்.இந்நிலையில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடையை திறந்ததால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்த பாமகவினர் டாஸ்மாக் கடையை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை அறிந்த  பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் இ.தினேஷ் குமாரை  நேரில் சென்று பொதுமக்களிடம் எடுத்து சொல்லி சட்டப்படி கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.அதன் பேரில் பட்டாபிராமபுரம் கிராமத்திற்கு சென்று பொது மக்களிடம் அப்பகுதி நிலவரம் குறித்து மாவட்ட செயலாளர் இ. தினேஷ்குமார் கேட்டறிந்தார்.டாஸ்மாக் கடை அருகே அரசு மற்றும் தனியார் என 4 கல்லூரிகள் இருப்பதால் மாணவ மாணவிகள் அதிக அளவில் இந்த கடையை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து பாமக சார்பில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இடம் டாஸ்மாக் கடையை மூடக்கோரி  திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் இ. தினேஷ் குமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப்பிடம் புகார் மனு அளித்தனர்.விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் பாமகவினர் கலைந்து சென்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் தீர்வு கிடைக்காத பட்சத்தில் பாமக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும். நீதிமன்றத்தை நாடி கடையை மூடுவோம் என மாவட்ட செயலாளர் இ. தினேஷ்குமார் தெரிவித்தார்.இதில் மாவட்ட தலைவர் பா.விஜயன்,தொகுதி செயலாளர் பாலாஜி, தொகுதி தலைவர் ஜெகன், இளைஞர் சங்க பொறுப்பாளர் கோபி மற்றும் நிர்வாகிகள் சந்தோஷ், ஜானி, கோவலன், சந்தோஷ், ரஞ்சித், ரஜினி உட்பட பலர் உடனிருந்தனர். பேட்டி : இ. தினேஷ்குமார்பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர்
Next Story