அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிக்கு அபராதம்!

X
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 18ஆம் தேதி லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார். அதன்பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன் விசாரணை நடத்தி அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிக்கு ரூ.1,40,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

