தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

X
தஞ்சாவூரில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டு மனைப் பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 120 மனுக்கள் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் அருள்பிரகாசம் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

