நினைவேந்தல் நிகழ்ச்சியில் மருதுபாண்டியர் கல்லூரி சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கல்

X
கல்விக் காவலர் பூண்டி துளசி ஐயா வாண்டையாரின், நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு விழா அரங்கில் உரு.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஒரத்தநாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன், ஆடிட்டர் ஆர்.ரவிச்சந்திரன், முன்னாள் தஞ்சை ஒன்றியப் பெருந்தலைவர் செல்வம், தஞ்சை மூத்த வழக்கறிஞர் வெங்கடேசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் சார்பாக செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மருதுபாண்டியனால், நிதி உதவி அளிக்கப்பட்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
Next Story

