தஞ்சை சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

X
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள மானோஜிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜீவா (24). இவர் 2023, ஜூன் 30 ஆம் தேதி எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில், தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ஜீவாவை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ.தமிழரசி விசாரித்து ஜீவாவுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக அரசிடமிருந்து ரூ.6 லட்சம் பெற்றுத் தருமாறும் உத்தரவிட்டார்.
Next Story

