தேசியத்தையும் தெய்வீகத்தையும் நாமக்கல் பூமியில் ஆபரேஷன் செந்தூர் வெற்றி மூவர்ண கொடி பேரணி மூலம் நாமக்கல் மக்கள் காட்டியுள்ளனர்! மத்திய இணை அமைச்சர் முருகன் நெகிழ்ச்சி உரை!

நாமக்கல் பூமி தேசத்தின் பூமி ஆகும். இங்குள்ள பலரும் நாடு முழுவதும் சென்று தொழில் செய்து வருகின்றனர். தேசியத்தையும் தெய்வீகத்தையும் நாமக்கல் பூமியில் ஆபரேஷன் செந்தூர் வெற்றி பேரணி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ஆப்ரேஷன் செந்தூர் வெற்றி பேரணியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய தகவல்-ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக நேதாஜி சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த பேரணியில்,பாரதமாதா, பிரமோஸ் ஏவுகணை மாதிரிகள் உடன், முப்படை வீரர்கள் போல சீருடை அணிந்து சிறுவர் சிறுமிகள் ஊர்வலமாக வந்தனர். ஆயிரக்கணக்கானோர் கையில் தேசிய கொடி ஏந்தி பங்கேற்றனர்.நாமக்கல் நேதாஜி சிலை அருகே தொடங்கிய இந்த பேரணியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கட்சியின் மாநில துணை தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம், பொதுநல அமைப்பினர், முன்னாள் ராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் வேடமணிந்த சிறுவர்- சிறுமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கையில் தேசிய கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர். இந்த ஆபரேஷன் செந்தூர் வெற்றி பேரணி பிரதான சாலை வழியாக சென்று, பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அருகே உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைவு தூண் அருகே மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரதான சாலையில் சென்ற ஊர்வலமானது, நாமக்கல் கடைவீதி,பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று பூங்கா சாலையில் நிறைவடைந்தது அங்கு அமைக்கப்பட்ட மேடையில் பேசிய
மத்திய தகவல்- ஒலிபரப்பு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன்
பாரத தேசத்தின் இராணுவ வீரர்கள், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக எழுச்சியாக இந்த பேரணி நடைபெற்றது. நமது நாட்டு மக்கள் தேசத்தின் பக்கம் நிற்கின்றோம். மோடியின் பக்கம் நிற்கின்றோம். ராணுவத்தின் பக்கம் நிற்கின்றோம். மிகப்பெரிய பேரணியை நாம் நடத்தி உள்ளோம். நாமக்கல் பூமி தேசத்தின் பூமி ஆகும். இங்குள்ள பலரும் நாடு முழுவதும் சென்று தொழில் செய்து வருகின்றனர். தேசியத்தையும் தெய்வீகத்தையும் நாமக்கல் பூமியில் ஆபரேஷன் செந்தூர் வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக முப்படை வீரர்களின் நன்றி செலுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி செலுத்தும் விதமாக பேரணியை சிறப்பாக நடத்தியுள்ளோம். நாமக்கல் மக்கள் தேசத்தின் பக்கம் என்பதை எடுத்துக்காட்டி உள்ளோம். நமது நாட்டில் 2014-க்கு முன்பாக தீவிரவாதம் தலைவிரித்து ஆடியது. தீவிரவாதிகளை ஒடுக்கியது பிரதமர் நரேந்திர மோடி ஆவார். எந்த ஒரு ராணுவம் நடவடிக்கையாக இருந்தாலும், புல்வாமா தாக்குதலுக்கு நேரில் சென்று பதிலடி கொடுத்தோம். அதேபோல பஹல்காம் தாக்குதலானது, இந்திய மண்ணில் இருந்து அங்கு செல்லாமலேயே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இராணுவ தளவாடங்கள் பயன்படுத்தி, தக்க பதிலடி கொடுத்தோம். 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ராணுவ தளவாடங்களை நாம் ஏற்றுமதி செய்கின்றோம். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருந்த இடத்திலிருந்தே துல்லியமாக கணித்து பயங்கரவாத முகாம்கள்மீது நேரடியாக நமது ராணுவம் தகர்த்து எறிந்துள்ளது. தீவிரவாதத்தை எந்தவிதத்திலும் எந்த உருவத்தில் இருந்தாலும்கூட ஆதரிக்க முடியாது. அதனை முற்றிலுமாக அகற்றப்படும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி காட்டியுள்ளார். பிரதமர் நமது நாட்டின் எல்லை ராஜஸ்தான் பகுதிக்கு சென்று இராணுவ வீரர்களை சந்தித்து உரையாற்றினார். இனி பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை என்று ஒன்று இருந்தால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் இருக்க முடியும் என்பதை உறுதிப்பட தெளிவாக உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறியுள்ளார். இன்று இந்தியா வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. உள்கட்டமைப்பு, அறிவியல்- தொழில்நுட்பம், இராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்கின்றோம். 2014-க்கு முன்பு இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். இப்போது நாம் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆத்ம நிர்பர் பாரத் சுயசார்பு இந்தியா மூலம் ஏற்றுமதி செய்கின்றோம். ரயில்வே, விண்வெளி துறைகள் உலகில் முன்னணி நாடாக நமது பாரத தேச திகழ்கிறது. 5-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கிறோம். வருகின்ற
2047-ம் ஆண்டில் 100-வது சுதந்திரத்தை கொண்டாடும்போது இந்திய நாடு உலகத்தில் முன்னணி நாடாக முதன்மை நாடாக வல்லரசு நாடாக இருப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.
நாம் அந்த பாதையை ஆதரிக்க வேண்டும். ஆபரேஷன் செந்தூரில் வெற்றி பெற்றதை இன்று நாடு முழுவதும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நமது நாமக்கல்லிலும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இனிவரும் நாட்களில் கிராமந்தோறும் ஊர் ஊராக மக்கள் கொண்டாட உள்ளார்கள். இந்த வெற்றி இந்திய தேசத்தின் வெற்றியாகும். பாரத தேசத்தில் இனி யாரும் வாலாட்ட முடியாது. அவர்களின் வால் ஓட்ட நறுக்கப்படும் என்பதை உலகிற்கு எடுத்துக் கூறியுள்ளோம் எனவும் மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
, நமது நாடு நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும். அப்போதான் தமிழ் மொழியும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற முடியும் என்ற உணர்வு பல பேருக்கு இல்லை. செந்தூர் நடவடிக்கை முடிந்த பிறகு பலரும் சமூக ஊடகங்களில் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பாகிஸ்தான் & இந்திய மேஜர் ஜெனரல்கள் பேசி வைத்துக் கொண்டு செய்கிறார்கள் என்பது போன்ற தகவல்களை சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை ஒரு சிலர் பரப்பினார்கள்.உலகிலேயே மிக அழகான சுற்றுலா இடமான பகல்காமில் தீவிரவாதிகள் 26 அப்பாவி இந்தியர்களை மத அடையாளங்களை பார்த்து சுட்டுக் கொன்றார்கள். இதுபோன்ற வேதனையான சம்பவத்திற்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
பிரமோஸ் ஏவுகணையை வைத்து துல்லியமாக தீவிரவாதி முகாம்கள் மீது மக்களின் சேதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் ஒன்று கூட நமது இந்தியாவை குறை கூறவில்லை. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
பாகிஸ்தான் அணுகுண்டு பயன்படுத்த முடியாத அளவிற்கு அதனுடைய இடத்தை நிர்மூலம் ஆக்கி உள்ளோம். செந்தூர் ஆபரேஷனுக்கு பிறகு 7 நாடுகள் நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணையை இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இதற்குக் காரணம் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். 26 பெண்கள் குங்குமம் இல்லாமல் ஆக்கியவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சலாகும். தேசிய உணர்வும், சிந்தனையும்,செயலும் இன்னும் நமக்கு மேம்பட வேண்டும்.பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரின் உடல் சென்னை விமான நிலையம் வந்தபோது பாஜகவினர், காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினோம். ஆனால் திமுகவினர் அங்கு வந்து அஞ்சலி செலுத்தவில்லை.நமது நாட்டிற்காக ஒருவர் உயிர் தியாகம் செய்தால் உயிர் அவரை நமது சகோதர சகோதரிகளாக தான் பார்க்க வேண்டும். ஆனால் சிலருக்கு அந்த உணர்வு இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது.
இந்திய நாட்டை பாதுகாப்பது மட்டுமல்ல வல்லரசு நாடாக உயர்த்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஆனால் தமிழகத்தில் நடக்கும் நிலைமையை பார்த்தால் வருத்தம் அளிக்கிறது. போலீஸ் நிலையத்திற்கு ஒரு பெண் சென்று புகார் அளிக்க சென்றால் அவரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்கின்றார்கள். எஸ்சி, எஸ்டி கமிஷன் டெல்லியில் இருந்து தாமாக வந்து இதனை விசாரிக்கிறது. ஆனால் அதற்கு இந்த மாநில அரசு ஒத்துழைக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நீதி கிடைக்காமல் உள்ளது என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாமக்கல்லில் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே பி இராமலிங்கம், நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர்கள் கே.பி.சரவணன், இராஜேஷ்குமார், மாநில, மாவட்ட , நகர், ஒன்றிய , பேரூர் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள், முன்னாள் இராணுவத்தினர், வணிகர் சங்க நிர்வாகிகள், ரோட்டரி, லயன்ஸ் , ஜேசிஐ நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மற்றும் பொதுநல அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டனர்.
பேரணி முடிவில் நாமக்கல் நகர தலைவர் தினேஷ் நன்றி கூறினார்.
Next Story