பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை வாலிபர் கைது

பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை வாலிபர் கைது
போதையில்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதை ஒழிப்பு நடவடிக்கையாக ஆவடி காவல் ஆணையரக காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவுப்படியும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் உதவி ஆணையாளர் அவர்களின் அறிவறுத்தலின்படியும் இன்று கரையாண்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காலியிடத்தில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்ய வட மாநில ஆண் நபர் ஒருவர் எடுத்து வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் திருமதி. D.சுபாஷினி அவர்கள் தலைமையில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி.M.புவனேஸ்வரி ஆகியோர்கள் கொண்ட குழு சம்பவ இடம் சென்று அங்கு சந்தேகத்திற்கிடமாக சிமெண்ட் மற்றும் நீல நிறம் கலந்த ஷோல்டர் பேக்குடன் திரிந்துக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்து, பையை சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சா சுமித், என்பவர் மீது பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எதிரியை பூந்தமல்லி கனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-II, பூந்தமல்லி அவர்களிடம் ஆஜர்ப்படுத்தி உத்தரவுப்படி புழல் மத்திய சிறையில் ஒப்படைக்கப்பட்டது
Next Story