கந்திகுப்பம் அருகே டூவீலர் மீது லாரி மோதி முதியவர் பலி.

X
திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி அருகயுள்ள ஜங்கலபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (75) இவர் ஸ்கூட்டரில் கடந்த 20-ஆம் அன்று தேதி ஒரப்பம் தனியார் கல்லூரி அருகே கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனபாலை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பன் இன்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுவிபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

