போச்சம்பள்ளி அருகே பட்டாளம்மன் கோவில் திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் அடுத்த பெரிய புளியம்பட்டியில் மாரியம்மன், பட்டாளம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. 5-ம் நாள் காலை பட்டாளம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம், எடுத்துசென்றனர். அப்போது பட்டாளம்மன் கரகம், புற்று மாரியம்மன் கரகமும் தலை கூடுதல் நடந்ததது. தொடர்ந்து மாலை தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாவை ஒட்டி 5 ஆயிரம் ஆடுகளை பக்தர்கள் வெட்டி வழிபட்டு விருந்தினர்களுக்கு விருந்து அளித்தனர்.
Next Story



