ராமநாதபுரம் விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள கிராமங்களில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றிய பொதுமக்களுக்கு சம்பள பாக்கிகளை வழங்க வேண்டும். 60 வயதிற்க்கு மேற்பட்டோர்க்கு முதியோர் ஓய்வுதியம் வழங்கிட வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை சரி செய்யவும், பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கி, தொகுப்பு வீடு வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிக்கு வீட்டுமனை பாட்டா வழங்க வேண்டும். திருவரங்கத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரியும் பிரபகளூர், செம்பொன்குடி, செல்லூர், மீசல், திருவரங்கம் ஆகிய கிராமங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் எஸ்.மாரியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.ராஜா சிறப்புரையாற்றினார். விதொச மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்டகுழு உறுப்பினர் முருகன், வி.தொ.ச. தாலுகா தலைவர் சண்முகையா, தாலுகா செயலாளர் அங்குதன், பொருளாளர் முருகேசன், மாற்றுத்திறனாளிகள் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் ராஜேஷ், தாலூகா செயலாளர் ஆரோக்கிய பிரபாகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு முத்துமணி, பரமக்குடி நகர் குழு செயலாளர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

