ராமநாதபுரம் விருது கட்டு விழா நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வடுகபட்டி கிராமத்தில் உள்ள செல்வவிநாயகர், சுந்தரராஜ பெருமாள், குங்கும காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு எருதுகட்டு விழா நடைபெற்றது. எருதுகட்டு விழாவை முன்னிட்டு வடுகபட்டி கிராம மைதானத்தின் நடுவில் வடம் கட்டி ஒவ்வொரு மாடாக மைதானத்தில் கயிறு கட்டி அவிழ்க்க பட்டது. 14 காளைகள் இதில் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையை அடக்க 20 நிமிடங்கள் ஒதுக்க பட்டு காளைகளை அடக்க 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த வடமாடு எருதுகட்டு விழாவிற்கு மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்திருந்தன. இந்த எருது கட்டு விழாவை பெண்கள், சிறுவர்கள்,முதியோர் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஆர்வமுடன் ரசித்தனர். பிடிபடாத வெற்றி பெற்ற காளைகளுக்கு அண்டா, குத்துவிளக்கு, தென்னங்கன்று, பொங்கல் பானை, 15ஆயிரம் பணம் மற்றும் மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் இதே போல பரிசுகள் வழங்க பட்டது.
Next Story

