ராமநாதபுரம் விவசாயிகளை காக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் அறிவுரை

வேளாண் கல்லூரி மாணவர்கள் GATE,JAM தேர்வுகளில் வெற்றி பெற்று விவசாயிகளை காக்க அதற்கான தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவுரை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூரில் அமைந்துள்ள நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நிலைத்த உணவுப் பாதுகாப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் பாதை" என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் (ICRA 2025) நடைபெற்றது. நேற்று காலை முதல் நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு வேளாண் அறிவியல் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகள் கலந்துகொண்டு காலநிலையினால் ஏற்படும் பாதிப்பையும், அதிலிருந்து எவ்வாறு பயிர்களை பாதுகாப்பது என்பது பற்றியும் எடுத்துரைத்தனர். காலநிலை மாற்றம் குறித்து மாணவ மாணவிகளின் பரிசளிப்பு விழா இன்று நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் Dr.V.P.ஜெயசீலன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி மாணவர்களிடம் காலநிலை மாற்றத்தால் ஒரு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் கூடும்போதோ குறையும் போதோ நெல் மற்றும் கோதுமையின் விவசாய மாற்றங்கள் ஏற்படுகிறது அதை தவிர்க்க வேளாண் மாணவர்கள் அதற்கு தகுந்தாற்போல் வேளாண் ஆராய்ச்சி செய்ய வேண்டும், வேளாண்மை பயின்ற மாணவர்கள் தமிழக வேளாண்மை கல்லூரி மற்றும் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களான ICAR, IIT, MIT போன்ற நிறுவனங்களில் GATE,JAM தேர்வுகளில் வெற்றி பெற்று தொழில்நுட்பம் மற்றும் காலநிலை மாற்றம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு காலநிலை மாற்றத்தை பற்றியும் அதனால் எதிர்கொள்ள போகும் பிரச்சினைகளில் இருந்து எவ்வாறு விவசாயிகளை காப்பது அதற்கான தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும், இதனால் விவசாயம் மேம்படும் என அறிவுறுத்தி இந்தக் கருத்தரங்கில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அதன் பேராசிரியர்களுக்கும்நினைவு பரிசு வழங்கினார் இந்நிகழ்ச்சியில் நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் திருவேணி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தலைவர் அகமதுயாசின் வாழ்த்துரை வழங்கினார்.
Next Story