தமிழகத்தில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது: அமைச்சர்

தமிழகத்தில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரங்களை தெரிவித்து வருகிறது இதற்கு காரணம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திட்டங்கள் தான் என தூத்துக்குடி மாநகர திமுக பிரதிகள் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி: தமிழகத்தில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரங்களை தெரிவித்து வருகிறது இதற்கு காரணம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திட்டங்கள் தான் என தூத்துக்குடி மாநகர திமுக பிரதிகள் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். இதில் மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்பு தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் கலந்து ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார் ஏழை எளிய மக்கள் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் வகையில் ஆட்சி செய்து வருகிறார் அந்த வகையில் தான் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது மேலும் தமிழகத்தில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரங்களை தெரிவித்து வருகிறது இதற்கு காரணம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திட்டங்கள் தான் தெரிவித்தவர் மேலும் வருகின்ற தேர்தலில் தமிழக முதல்வரின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து மாபெரும் வெற்றியை பெறுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார் இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், திமுக மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல், பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் செந்தில்குமார், சுகாதார குழு தலைவர் ஸ். சுரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, கலைச்செல்வி திலகராஜ், நிர்மல், அன்னலட்சுமி கோர்ட் ராஜா, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அபிராமி நாதன், அந்தோணி கண்ணன், அண்ணாதுரை, மாவட்ட மகளிரணி கவிதா, நகர துணை செயலாளர் ரவி, திமுக வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், கதிரேசன் வழக்கறிஞர் சதீஷ்குமார், கங்கா, ராஜேஷ், மாநகர இளைஞர் அணி அருண்குமார், சூரியா, மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, பவானி, நாகேஸ்வரி, உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story