வடகல்ப தண்ணீர் இல்லாததால் பால் பயிர்கள் கருகும் அபாயம்!
தூத்துக்குடி வடகால் பாசன பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் திறக்காததால் சுமார் 8,500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை பயிர்கள் முழுவதுமாக கருகும் அபாயம் உடனடியாக தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை விவசாயம் மிகவும் முக்கியமானதாகும் பணப் பயிரான வாழை பயிரை இங்கு அதிக அளவில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக தாமிரபரணி வடகால் பாசன பகுதியான சேர்வைக்காரன் மடம் சாயர்புரம் இருவப்ப புரம் குலையன் கரிசல் கோரம்பள்ளம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் சுமார் 8500 ஏக்கர் ஏக்கரில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர் இந்நிலையில் பிசான சாகுபடிக்காக கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை வடகால் பாசன பகுதியில் பொதுப்பணித் துறை சார்பில் தண்ணீர் திறந்து விட்ட நிலையில் அதன் பின்பு வடகால் பாசன பகுதியில் மடைகளின் பராமரிப்பு என்ற பெயரில் கடந்த இரண்டு மாதங்களாக வடகால் பாசன பகுதியில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை இதன் காரணமாக வாழை பயிர்கள் குழை தள்ளி அறுவடை செய்யும் நேரத்தில் தண்ணீர் இல்லாததால் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் வாழைத்தார்களின் வளர்ச்சியும் குறையும் நிலை உருவாகியுள்ளது இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் முறையிட்டனர் இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து குறைவான அளவில் தண்ணீர் கடந்த 19ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையிலும் பல்வேறு பகுதிகளில் மடைகளில் ஷட்டர் இல்லாததால் வடகால் பாசன பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு கடந்த ஐந்து நாட்களாகியும் திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை இதன் காரணமாக 2500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை விவசாயம் முற்றிலும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது ஏற்கனவே பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணையில் போதிய அளவில் தண்ணீர் இருக்கும் சூழ்நிலையில் கூடுதலாக சுமார் 700 கன அடி தண்ணீரைப் பெற்று வடகால் பாசனம் பகுதியில் சுமார் 15 நாட்களுக்கு தண்ணீர் வரும் அளவிற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தான் தங்கள் விவசாயத்தை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர் ஏற்கனவே கடந்த ஆண்டு புயல் மழை வெள்ளம் ஆகியவற்றால் வாழை விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் வாழை விவசாயம் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே தங்களது வாழை பயிர்கள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்
Next Story



