சேலத்தில் ஜவுளி வியாபாரியிடம் கத்திமுனையில் பணம், செல்போன் பறிப்பு

X
சேலம் அம்மாபேட்டை நாராயணன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 77). ஜவுளி வியாபாரி. சுப்பிரமணி நேற்று முன்தினம் வீட்டின் அருகே நடந்து சென்றார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சுப்பிரமணியை தாக்கியதுடன் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சுப்பிரமணியிடம் பணம், செல்போன் பறித்தது அம்மாபேட்டை பெரிய கிணறு பகுதியை சேர்ந்த தினேஷ் (22) அவருடைய கூட்டாளிகளான விக்ரம், ஹரி ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் தினேசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், ரூ.1,000, கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story

