போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X
15 வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி நாகல்நாகரில் போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மண்டல அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் போக்குவரத்து மண்டல செயலாளர் ஜெயராமன் ஏற்பாட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் போக்குவரத்து நாகல்நாகர் பணிமனை முன்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் இ.பி முத்தையா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். இதனைத் தொடர்ந்து 15வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், போக்குவரத்து துறையில் நான்கு வருட ஒப்பந்தம் முடிந்தும் இரண்டு வருடமாகியும் பேச்சுவார்த்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு D A நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வலியுறுத்தியும், 2023 ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்களை உடனே வழங்கிட வலியுறுத்தியும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story