காளிக்கேசகத்தில் பக்தர்களிடம் வசூல் விஎச்பி புகார்

X
குமரி விஎச்பி மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில்,மாநில இணை அமைப்பாளர் காளியப்பன்,மாவட்ட செயலாளர் ராஜேஷ்,மாநகர தலைவர் நாஞ்சில்ராஜா பொதுச் செயலாளர் கார்கில் மணிகண்டன் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காளிகேசம் காளி கோவில் வனத்துறை சட்டம் வருவதற்கு முன்பாகவே காளிகேசத்தில் காளி கோயில் இருந்து வருகிறது ஆனால் தற்போது வனத்துறை சட்டம் என்று சொல்லி கோவிலுக்கு சாமிகும்பிட செல்பவர்களிடம் ஒரு நபருக்கு 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று வனத்துறை வசூலிக்கிறது. இது பக்தர்களின் மனதை வேதனைப்படுத்துவதோடு சாமி கும்பிடுவதற்கு வனத்துறைக்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே செவ்வாய் வெள்ளி மற்றும் பௌர்ணமி அன்று மட்டும் சாமி கும்பிட செல்லும் பக்தர்களிடம் பணம் வசூலிக்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story

