திருக்காம்புலியூர் அருகே இளைஞர் ஓட்டிய டூவீலர் மீது முதியவர் டூவீலர் மோதி விபத்து.

திருக்காம்புலியூர் அருகே இளைஞர் ஓட்டிய டூவீலர் மீது முதியவர் டூவீலர் மோதி விபத்து.
திருக்காம்புலியூர் அருகே இளைஞர் ஓட்டிய டூவீலர் மீது முதியவர் டூவீலர் மோதி விபத்து. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எல் என் எஸ் போஸ்ட், வேலுச்சாமிபுரம், 4-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் ஆதித்தன் வயது 44. இவர் மே 21 ஆம் தேதி காலை 8 மணி அளவில், கரூர் - கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அருகில் உள்ள திருக்காம்புலியூர் தனியார் காபி கடை அருகே வந்தபோது, அதே சாலையில் பின்னால் வந்த கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, சின்னகரியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து வயது 72 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், ஆதித்தன் ஓட்டிய டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த ஆதித்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஆதித்தனின் தாயார் வெண்ணிலா வயது 60 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நாச்சிமுத்து மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story