விழிப்புணர்வு பேரணியை சார் பதிவாளர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் நெகிழிகள் சேகரிப்பு மற்றும் கடற்கரையை தூய்மை படுத்துதல் நிகழ்வு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று நடைபெற்றது முன்னதாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் நெகிழிகள் சேகரிப்பு மற்றும் கடற்கரையை தூய்மை படுத்துதல் நிகழ்வு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று நடைபெற்றது முன்னதாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மீன் மார்க்கெட் பகுதியில் தொடங்கி பேரணி லைட் ஹவுஸ் வரை நடைபெற்றது இதில் கடலோர காவல் படை சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆரணி ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கடற்கரை ஓரங்களில் சென்னை மெரினாவில் தூய்மைப்படுத்துவது போன்று வாகனங்களை வைத்து தூய்மைப்படுத்த பரிசீலினை செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் கடற்கரை ஓரங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை தனித்தனியாக வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என ஆட்சியர் பிரதாப் உறுதி அளித்தார் தமிழக அரசின் பசுமை விருது திருவள்ளூர் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளதாக ஆட்சியர் பெருமிதம் தெரிவித்தார்
Next Story