தடை செய்யப்பட்ட புகையிலையுடன் ஒருவர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலையுடன் ஒருவர் கைது
X
4.5 கிலோ பறிமுதல்
குமரி மாவட்டம் மணிகட்டி பொட்டல் பகுதியில் சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் வாகன சோதனை செய்து கொண்டிருக்கும் பொழுது சந்தேகத்தின் படி வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் கல்குளம் கருங்காலி விளையைச் சார்ந்த சுரேஷ் -( 44) என்பவர் என தெரிந்தது. தனது இருசக்கர வாகனத்தில் அரசு தடை செய்த புகயிலைப் பொருட்களை அதிக லாப நோக்கத்தோடு ஊர் ஊராக சென்று பள்ளி மாணவர்களுக்கும் கடைகளுக்கும் அதிக விலைக்கு விற்பதற்காக சாக்கு முட்டையில் 4. 500 கிலோ கிராம் கணேஷ் புகையிலையும், 300 கிராம் கூல் லிப் எனும் புகயிலை போதைப் பொருளையும் கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் அவர் விற்பனை செய்து வைத்திருந்த 9, 600 ரூபாயையும் அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story