இராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு

மதுரை விமான நிலையத்தில் இன்று இராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
மதுரை திருமங்கலம் தாலுகா, சாத்தங்குடி கிராமத்தை பூர்விகமாக கொண்ட லெப்டினன்ட கர்னல் சுரேஷ் அவர்களுக்கு இன்று (மே.24) மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர் தனது 20-வது வயதில் 2004 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு "Nursing Assistant" எனும் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து ராணுவத்தில் அதிகாரியாக தேர்வு முறைகளை கண்டறிந்து ஐந்து ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்கள் மட்டுமே அதற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில் 5 ஆண்டுகள் தனது துறை சார்ந்த பணிகளையும் மேற்கொண்டு SSB எனப்படும் இராணுவ அதிகாரி தேர்வில் 2010 ஆம் ஆண்டு AMC எனப்படும் மருத்துவப் பிரிவில் சுமார் 6000 பேர் இந்த அதிகாரி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 5 நாட்கள் அலகாபாத் அதிகாரிகள் தேர்வு மையத்தில் நடைபெற்ற பல்வேறு தேர்வு முறைகளுக்கு பின் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 20 பேர்களில் ஒரு தமிழனாக தேர்வு செய்யப்பட்டார். லெப்டினட்,கேப்டன், மேஜர் லெப்டினட் கர்னல் ஆக பதவி வகித்துள்ளார் மேலும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம், லக்னோவில் நடைபெற்ற பயிற்சியில் சிறந்த அதிகாரியாகவும், Drill போட்டியில் முதலிடத்தையும் அணிவகுப்பில் வழிநடத்தும் Parade Commander ஆகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
Next Story