டெக்ஸ் பார்க் அருகே இயற்கை அழைப்புக்கு சென்ற முதியவரை இடை மறித்து ,செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற பள்ளி மாணவன் உள்ளிட்ட இருவர் கைது.
டெக்ஸ் பார்க் அருகே இயற்கை அழைப்புக்கு சென்ற முதியவரை இடை மறித்து ,செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற பள்ளி மாணவன் உள்ளிட்ட இருவர் கைது. கரூர் மாவட்டம் , மன்மங்கலம் அருகே பள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் வயது 64. இவர் ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 10மணி அளவில் , கரூர் - திண்டுக்கல் சாலையில் டெக்ஸ் பார்க் அருகேஅவரது டூவீலரில் சென்றபோது,இயற்கை அழைப்பு வந்ததால் தனது டூவீலரை நிறுத்தியுள்ளார். அப்போது மற்றொரு டூவீலரில் வந்த கரூர் பசுபதிபாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் +2 படித்து வரும் இலங்கை மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த மாணவன் மற்றும் அதே மையத்தைச் சேர்ந்த இன்பரசன் வயது 20 ஆகிய இருவரும்முதியவர் சக்திவேல் இடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூபாய் 9000 மதிப்புள்ள செல்போன் மற்றும் பணம் 300 ஆகியவற்றை பறித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சக்திவேல் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக17 வயது சிறுவன் மட்டும் இன்பரசன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய டூவீலர் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் , முதியவரை மிரட்டி பறித்த செல்போன் மற்றும் ரூபாய் 300-யும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story




