தீ விபத்துகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட எஸ்பி கண்ணன் முன்னிலையில் தீயணைப்பு மீட்புப்பணிகள் இயக்குநர்- காவல்துறை தலைமை இயக்குநர் சீமா அகர்வால் தலைமையில் நட

X
மனித உயிர்களைவிட பணம் முக்கியமல்ல;முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு உணர்வுடன் பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபட்ட வேண்டும்-விருதுநகரில்பட்டாசு உற்பத்தியாளர்கள்- விற்பனையாளர்களுடன் தீ விபத்துகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் தீயணைப்பு மீட்புப்பணிகள் இயக்குநர்-காவல்துறை தலைமை இயக்குநர் சீமா அகர்வால் பேச்சு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகக் கூட்டரங்கில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் தீ விபத்துகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட எஸ்பி கண்ணன் முன்னிலையில் தீயணைப்பு மீட்புப்பணிகள் இயக்குநர்- காவல்துறை தலைமை இயக்குநர் சீமா அகர்வால் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய இயக்குநர் சீமா அகர்வால், இந்திய முழுவதும் சிவகாசியில் இருந்து பட்டாசு விற்பனை செய்யப்படுவது பெருமையாக உள்ளது. தரத்தின் மூலம் நமது ஊர் பெயர் வாங்க வேண்டும். விபத்தின் மூலம் அல்ல. விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்து ஏற்படுவதை பட்டாசு உற்பத்தியாளர்கள் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வரும் காலங்களில் சிறிய வெடி விபத்து கூட நடக்க கூடாது. சிவகாசியில் பட்டாசு ஆலைகள் சட்டவிரோதமாக குத்தகைக்கு விடப்படுவதால் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது. உயிரை பழி கொடுத்து பணம் சம்பாரிக்க வேண்டியது அவசியம் அற்றது. முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு உணர்வுடன் பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபட்ட வேண்டும். பாதுகாபற்ற முறையில் பட்டாசு உற்பத்தி ஈடுபடுவதை தவிர்த்து பாதுகாப்புடன் உற்பத்தி பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். முன்னதாக தீயணைப்பு துறையினரால் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு தீ விபத்து தடுப்பு குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

