கோத்தகிரி நாவா சாலையில் பரவி நிறைந்துள்ள குப்பை காட்சிகள் அதில் மேயும் கால்நடைகளின் காட்சி
கோத்தகிரி நாவா சாலையில் பரவி நிறைந்துள்ள குப்பை காட்சிகள் அதில் மேயும் கால்நடைகளின் காட்சி கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் சாலைகளில் குவிந்துள்ள கழிவுகள் பசுமை மலைநகரின் பரிதாப காட்சிகள் கோத்தகிரி, நீலகிரி மாவட்டம் – அழகிய பசுமை மலைகளால் பிரபலமான கோத்தகிரி நகரம் இன்று மாசின் மூடுபடலத்தில் மூழ்கியுள்ளது. நகரின் பல முக்கிய சாலைகளில் குப்பைகள் அடுக்கடுக்காக குவிந்து கிடக்கிறது “இதுதான் கோத்தகிரியா? இயற்கை அழகுக்கு பெயர்போன இடம்னு நினைச்சோம். ஆனா இங்க பார்க்குறதெல்லாம் பிளாஸ்டிக் மூட்டைகளும் உணவுப் பழுப்புகளும் தான்,” என்று சொல்கிறார் சமீபத்தில் சென்னையிலிருந்து குடிபோன ம ஒருவர். நகரின் பஸ்நிலையம், பெரிய சந்தை, பள்ளி அருகிலான சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் பூரண சுத்தம் செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சித் துறையின் கண் மூடிய நிலைமை இதற்குக் காரணம் என பலர் குற்றம் சுமத்துகின்றனர். பசுமை சுற்றுச்சூழல் மீது ஈடுபாடு கொண்ட அமைப்புகள் இது குறித்து கவலையும், கோரிக்கையும் தெரிவிக்கின்றன. “கோத்தகிரி நம்மடையது. இப்போதே நடவடிக்கை எடுக்கவில்லையெனில், சுற்றுலா வளர்ச்சி பாதிக்கப்படும்,” என்கிறார் ‘கோத்தகிரி கிரீன்’ என்ற சுற்றுச்சூழல் இயக்க ஒருங்கிணைப்பாளர். இந்த அழகிய மலைநகரம் மீண்டும் அதன் பசுமை முகத்தை பெற வேண்டுமானால், நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்படவேண்டும் என்ற கோரிக்கையை உணர்த்துகிறது இந்த கோத்தகிரி நாவா சாலையில் பரவி நிறைந்துள்ள குப்பை காட்சிகள் அதில் மேயும் கால்நடைகளின் காட்சி
Next Story



