மாவட்ட ஆட்சித் தலைவர் பேட்டி
நீலகிரி நீலகிரியில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி மிக கனமழை பெய்யும் என (ரெட் அலர்ட்) எச்சரிக்கை இருப்பதால் மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் உதகை படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து...மூன்று நாட்களுக்கு TREK TAMILNADU என்ற தலைப்பில் வனப்பகுதிக்குள் நடை பயணம் மேற்கொள்ளவும் தடை. நீலகிரியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மரத்தின் கீழ் வாகனங்களை நிறுத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ பேட்டி... நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும், ரெட் அலார்ட்டு எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல் தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் எவ்வித பேரிடர்களும் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் 283 பேரிடர் அபாயம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், 480 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதகை தலையாட்டும் மந்து பகுதியில் உள்ள பொதுமக்களை தங்க வைக்க உள்ள நிவாரண முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் மாவட்ட பருவமழை கண்காணிப்பு அலுவலர் லலிதா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை முதல் அதிமிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் 24 மணி நேரமும் மழை தொடர்பான கண்காணிப்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறினார். மேலும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை மற்றும் நாளை மறுநாள் உதகை படகு இல்லத்தில் வடக்கு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மூன்று நாட்களுக்கு Trek Tamilnadu என்ற தலைப்பில் வனப்பகுதிக்குள் நடைபயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீலகிரியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மரத்தின் கீழ் வாகனங்களை நிறுத்தக்கூடாது எனவும், மரத்தின் கீழ் நிற்கவும் கூடாது எனவும், மின்சார கம்பிகள் செல்லும் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பேட்டி: லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட ஆட்சித் தலைவர்.
Next Story




